சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர்ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்துவழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும்வழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 3-ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன,எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும் என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, இத்தேர்வுகளுக்கு படிப்பதற்கான தெளிவை தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்றவழிகாட்டு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலைகோவை அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.
இதில், கோயம்புத்தூர் ஆட்சியர்டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் ஐபிஎஸ், ‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவிஆசிரியர் செல்வ.புவியரசன், சங்கர்ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர்.
இதில் பங்கேற்கும் அனைவருக்கும் ‘தேர்வுக்கு வழிகாட்டி’ நூல்,பாடத்திட்ட குறிப்புகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.