டெல்லி: பேருந்துகளை சாலைகளில் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் ஒட்டாத ஓட்டுனருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. சாலைகளில் பேரூந்துகளுக்கென ஒதுக்கியுள்ள பாதையில் அவற்றை இயக்காமல் 2-வது முறை தவறு செய்தால் ஓட்டுநர் மீது அபாயகரமான முறையில் பேருந்தை ஒட்டியதாக வழக்கு பதிவு செய்யப்படும் டெல்லி சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.