வங்கி மோசடி அல்லது மோசடிகளால் இந்தியா ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 கோடி ரூபாயினை இழந்துள்ளதாக ஆர்பிஐ தரவுகள் சுட்டி காட்டுகின்றன.
இது குறித்த ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, கடந்த ஏழு ஆண்டுகளில் வங்கி மோசடிகள் அல்லது மோசடிகள் மூலமான இந்தியா தினசரி குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயினை இழந்துள்ளது.
இதில் இந்தியாவின் மிகப்பெரிய நிதியினை கொண்டுள்ள மாநிலமான மகாராஷ்டிரா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்யும் லுலு குழுமம்.. எங்கு தெரியுமா?
அதிக மோசடி எங்கு?
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த மோசடி பணத்தில் 50% மகாராஷ்டிராவில் இருந்து தான் இழக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லி, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்கும். மேற்கண்ட இந்த 5 மாநிலங்கள் மட்டும் மொத்த மோசடி விகிதத்தில் 83% பங்கு வகித்துள்ளதாகவும், இதன் மதிப்பு 2 லட்சம் கோடிக்கு மேல் என்றும் கூறப்படுகின்றது.
ரூ.2.5 லட்சம் கோடி மோசடி
ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, கடந்த ஏப்ரல், 1, 2015 முதல். டிசம்பர் 31, 2021 வரையில் வங்கி மோசடிகள் மற்றும் மோசடிகள் மூலம் 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடிகளானது 8 வகையில் நடைபெறுவதாகவும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.
எப்படி மோசடி?
இதில் வங்கிக் கணக்கினை தவறாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் கொடுத்து பணம் பெறுதல், கணக்குகளில் திருத்தம், சொத்து பரிமாற்றத்தில் மோசடி, வெளி நாட்டு பணப் பரிமாற்றத்தில் முறைகேடு, ஏமாற்றுதல் போன்ற பல வகையில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி பட்டியலிட்டுள்ளது.
ஆறுதல் தரும் விஷயம்
ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையின் படி ஆறுதல் தரக்கூடிய விஷயம், அரசின் பல்வேறு நடவடிக்கைக்கு மத்தியில் மோசடிகள் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
நிபுணர்களின் கருத்து என்ன?
நெட்ரிகா கசன்ல்டிங் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் கெளஷிக் வங்கிகள் மோசடிகளுக்காக, வங்கிகள் சுவர்களுக்கு வெளியே அதிக நேரம் செலவிடுகின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு பொறுப்புணர்வினை அதிகரிக்க வேண்டும். அது தான் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக முக்கிய பிரச்சனைகளை கையாளும்போது பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு?
ரிசர்வ் வங்கி தரவின் படி, கடந்த 2015 – 16ல் 67,760 கோடி ரூபாயாக இருந்த மோசடியின் அளவு, 2016 – 17ல் 59,966.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளில் 45,000 கோடிக்கு கீழாகவும், 2019 – 20ல் இந்த மோசடி விகிதமானது இன்னும் குறைந்து 27,698.4 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. இது 2020 – 21ல் 10,699.9 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 647.9 கோடி ரூபாயாகவும் உள்ளது.
Daily loss of Rs 100 crore due to bank fraud in india; do you know how?
Daily loss of Rs 100 crore due to bank fraud in india; do you know how?/வங்கி மோசடி மூலம் தினசரி ரூ.100 கோடி இழப்பு.. ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்..!