மயிலாடுதுறை மாவட்டம் கூழையார் கடலில் 22 ஆயிரம் அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் பத்திரமாக விடப்பட்டன.
பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் கூழையார் கிராமத்தில் செயல்பட்டு வரும் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு குஞ்சு பொறித்த ஆமைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுவரை மூன்று கட்டங்களாக 15572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற்பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.