சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று, யுனிவர்சிட்டி கிரண்ட்ஸ் கமிஷன் எனப்படும் யுஜிசி அமைப்பு இந்த அறிக்கையில் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறாமல் தொலைதூர படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருவதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மீது குற்றஞ்சாற்றப்பட்டது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2014-2015 ஆம் ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது என்றும் யுஜிசி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கது அல்ல என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.