இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை
தலிபான் அரசு
அமல்படுத்தி வருகின்றனர்.
ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி கற்க தடைவிதிக்கப்படுவதாக தலிபான்கள் அண்மையில் அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு அதிர்ச்சிகரமான உத்தரவை தலிபான் அரசு தற்போது பிறப்பித்துள்ளது.
ஆண்களும், பெண்களும் இனி ஒன்றாக பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்லக்கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாரத்தில் 4 நாட்கள் ஆண்களும், 3 நாட்கள் பெண்களும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 நாட்கள் முழு ஊரடங்கு – அரசு உத்தரவால் பொது மக்கள் ஷாக்!
தங்களின் புதிய அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டும் என்று தலிபான்கள் கோரி வரும் நிலையில், சர்வதேச சமூக நடைமுறைக்கு முரணாக, தொடர்ந்து பாலின பிரிவினை கட்டுப்பாடுகளை தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர்.
உலக அளவில் இன்று சாமானிய மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் பூங்காக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதும், அங்கு செல்ல ஆண், பெண்ணுக்கு ஆப்கானிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திஅப்ரமோவிச்சுக்கு விஷம் கொடுத்தார்களா?.. “அபத்தம்”.. ரஷ்யா நிராகரிப்பு