ஓசூரில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது டேங்க்கர் லாரி மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் .!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக சாலையைக் கடக்க முயன்றவர் மீது டேங்க்கர் லாரி மோதி தூக்கி வீசும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

சாமல்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான சுந்தரம் என்பவர் தனது டிவிஎஸ் எக்சல் சூப்பர் வாகனத்தில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

சாலைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியில் நீண்ட நேரமாகக் காத்திருந்த சுந்தரம், தூரத்தில் வந்துகொண்டிருந்த டேங்க்கர் லாரி ஒன்றின் வேகத்தை கணிக்க முடியாமல் திடீரென சாலையைக் கடந்து செல்ல முயன்றார்.

அவரை நெருங்கிவிட்ட லாரி ஓட்டுநர் வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போகவே, லாரி மோதியதில் சுந்தரம் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் நின்ற கார் ஒன்றின் மீது தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.