பொலிசார் துரத்தியதால் மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்த ஒருவர், கிட்டத்தட்ட வெறும் எலும்புக்கூடாக மீடகப்பட்ட கோர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது.
Luiz Henrique Coelho de Andrade (21), ஒரு கால்பந்து வீரர் ஆவார். ஆனால், அவரைக் குற்றவாளி என தவறாக நினைத்து பொலிசார் துரத்தியிருக்கிறார்கள்.
பொலிசார் துப்பாக்கியால் சுடவே, பயந்து போன Luiz நதி ஒன்றில் குதித்திருக்கிறார்.
11 மணி நேரம் கழித்து, அவரது உடல் கிட்டத்தட்ட வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு நீந்தத் தெரியாது என்று தெரிந்தும் பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டு நதியை நோக்கித் துரத்தியதாக Luizஇன் தாயாகிய Leila Coelho தெரிவிக்கிறார்.
ஆனால், பொலிசார் ஒரு கூட்டம் குற்றவாளிகளைத் துரத்திக்கொண்டிருந்தபோது, அவர்களிடமிருந்து விலக முயன்ற Luiz, தவறி நதியில் விழுந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.