கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை, வரலாறு காணாத இந்த வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகளிடம் நிதியுதவியை நாடி வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை கடன் கோரி வருகிறது.
இதுதொடர்பாக, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனையடுத்து இலங்கைக்கு .7,600 கோடி ரூபாய் கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாட் டில் பங்கேற்கவும், இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசிக்கவும் மத்திய
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இலங்கைக்கு சென்றுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜ பக்சே ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
இலங்கையின் முக்கிய தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய ஆலோசனையின்போது, இந்தியாவிடம் மேலும் 7,600 கோடி ரூபாய் கடனை இலங்கை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த செய்திசோதனை மேல் சோதனை… ஒட்டுமொத்த தேசமும் இருளில் மூழ்கும் அபாயம்!