கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மேயர் கறி விருந்து வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி மேயர் கூட்டம் முடிந்ததும் மேயர் கறி விருந்து வைத்துள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
அதன்பின் அனைவருக்கும் சிக்கன் மற்றும் மட்டன் கறி விருந்து வைத்த நிலையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுவிட்டு மேயருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.