Tamil Lifestyle Update : சமையலில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று தேங்காய. சாதத்திற்கு வைக்கும் சாப்பார் தொடங்கி இட்லிக்கு செய்யும் சட்னி வரை தேங்காய் ஒரு முக்கிய சமையல்பொருளாக பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தேங்காயில் பல ஆரோக்கியமான நன்மைகள் அடங்கியுள்ளது.
ஆனால் தேங்காய் உடைப்பதில் இருந்து அதை துருவி எடுப்பதை வரை பலருக்கும் கஷ்டமாக ஒரு வேலையாக இருக்கும். ஆனால் இந்த செயல்முறையில் எளிமையாக வழியை தெரிந்துகொண்டவர்கள் அதனை ஈஸியாக செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இந்த எளிமையான வழி பலருக்கும் தெரியாமல் உள்ளது.
பொதுவாக தேங்காய் சரியாக இடத்தில் தட்டும்போது இரண்டு பக்கமும் சரிசமமாக உடைந்துவிடும். அதற்கு முதலில் தேங்காய் நல்லதாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம். தேங்காய் முற்றியதா இல்லது இளம் தேங்காயா அல்லது பதமாக காயா என்பதை பார்த்து வாங்க வேண்டும். தேங்காயில் இருக்கும் முக்கண் பகுதிக்கு நேரகா உள்ள கோட்டிற்கு மேல் பலமாக தட்டினால் தேங்காய் சட்டேன்று இரண்டு பக்கமும் சரியான அளவில் உடைந்துவிடும்.
அதன்பிறகு தேங்காயின் இரு மூடிகளையும் இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து இட்லி போல் அவித்து எடுக்கும்போது, தேங்காய் மற்றும் ஓடு தனித்தனியாக எடுபபது சுலபமாகிவிடும். இப்படி அவித்து எடுத்த தேங்காய் ஓடு தனியாக எடுத்த பின் தேங்காய் பின்புறம் கருப்பு நிற தோல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் விட்டுவிடலாம். மாறாக கருப்பு நிற தோல் இருந்தால், அதை தனியாக சீவி எடுத்துவிட வேண்டும்.
அதன்பிறகு தேங்காய் சிறுசிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால், தேங்காய் பூ கிடைத்துவிடும். இந்த முறையில் கிடைத்த தேங்காய் பூவை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். ப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.
வீட்டில் தினமும் தேங்காய் துருவி எடுப்பதற்கு பதிலாக இந்த முறையை பயன்படுத்தினால் சமையலுக்கு நேரம் மிச்சமாகும். தேங்காய் அழுகிவிடுமோ என்ற பயமும் இருக்காது.