பெங்களூரு — மைசூரு 10 வழிப்பாதை சுறுசுறு| Dinamalar

பெங்களூரு-பெங்களூரு — மைசூரு இடையே, 8,350 கோடி ரூபாய் செலவில், 10 வழி சாலை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.இது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று கூறியதாவது:பெங்களூரு — நிடகட்டா — மைசூரு தேசிய நெடுஞ்சாலை — 275ல், 117 கி.மீ., தொலைவிலான சாலை பத்து வழி சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது. 8,350 கோடி ரூபாய் செலவிலான திட்டம், நடப்பாண்டு அக்டோபரில் முடிவடையும்.திட்டம் முடிவடைந்த பின், பெங்களூரு — மைசூரு இடையிலான பயண நேரம் குறையும். இரண்டு நகரங்களுக்கிடையே போக்குவரத்து சிறப்பாக இருக்கும். சுற்றுலா அபிவிருத்திக்கும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.