ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த 34 பேர் சொத்துகள் வாங்கி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப் பிரிவு 370 கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன் வரை ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் சொத்துகளை வாங்க முடியாது. சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, பிற மாநிலங்களைச் சேர்ந்த 34 பேர் ஜம்மு காஷ்மீரில் சொத்துகள் வாங்கி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM