ஐ.சி.சி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசையில் மிதாலி ராஜ் மற்றும் கோசுவாமி ஆகிய இருவரும் முன்னேறி உள்ளனர்.
பெண்களுக்காக உலகக்கோப்பை போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிலையில், ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்து அசத்திய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், இரண்டு இடங்கள் முன்னேறி, 686 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோல், இரண்டு இடங்கள் முன்னேறிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கோசுவாமி 663 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 669 புள்ளிகளுடன் 10 இடத்தை பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் லாரா வால்வார்ட் இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளார். இவர், ஆஸ்திரேலிய ஜோடியான மெக் லனிங் மற்றும் பெத் மூனியை பின்னுக்குத் தள்ளி ஐசிசி பெண்கள் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து உள்ளார்.