‘பசுமை தேசம்’ தேசிய வீட்டுத்தோட்ட திட்டம் -2022 தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை குறிக்கும் வகையில் இன்று (29) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ரராஜபக்க்ஷ அவர்கள் மாளிகை வளாகத்தில் பலா கன்றொன்றை நாட்டிவைத்தார்.
காலை 9.18 மணியளவிலான சுப வேளையில் பலா மரக்கன்றொன்றை கௌரவ பிரதமர் நட்டு வைத்தார்.
நச்சுத்தன்மையற்ற சத்துக்கள் நிறைந்த புதிய காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் கிழங்கு வகைகளை தங்கள் சொந்த வீட்டு தோட்டங்களில் இருந்து பெற்று, அதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் தன்னிறைவு பெற்ற குடும்ப அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் ‘பசுமை தேசம்’ தேசிய வீட்டுத் தோட்டத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன ஆகியோரும் அலரிமாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
இந்த வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 2.2 மில்லியன் குடும்பங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி திணைக்களத்தின் மரக்கன்று விற்பனை நிலையங்களிலுள்ள கன்றுகளை அப்பிரிவுகளை சேர்ந்த பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
பிரதமர் ஊடக பிரிவு