ஆரம்பமே அசத்தல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய எஸ்பிஐ, டாடா பவர்!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது இன்னும் ஏற்றம் காணுமா? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன?

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சாதகமான பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. தொடக்கத்தில் இது பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், தற்போது ஏற்றத்தில் காணப்படுகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பெட்ரோல் விலை மீண்டும் 80 பைசா உயர்வு.. விலைவாசி உயர துவங்கியது.. மக்கள் அவதி..!

சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இதனையடுத்து அமெரிக்க டாலரின் மதிப்பானது யென்னுடன் ஒப்பிடும்போது 6 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. அமெரிக்க பத்திர சந்தையும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதனையடுத்து ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

கடந்த மார்ச் 28 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 801.41 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதே உள்நாட்டு சந்தையில் 1161.70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ப்ரீ ஓபனிங்கிலேயே குழப்பம்
 

ப்ரீ ஓபனிங்கிலேயே குழப்பம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 23.75 புள்ளிகள் அதிகரித்து 57,617.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 25.90 புள்ளிகள் அதிகரித்து , 17,196.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்ட சந்தையானது, தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

தொடக்கத்தில் சென்செக்ஸ் பெரியளவில் மாற்றமின்றி 209.38 புள்ளிகள் அதிகரித்து, 57,802.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து, 17,285 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1378 பங்குகள் ஏற்றத்திலும், 517 பங்குகள் சரிவிலும், 87 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் லிஸ்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, சோமணி செராமிக்ஸ், ஜி ஆர் இன்ப்ராபுரஜெக்ட்ஸ், டாடா பவர், அரபிந்தோ பார்மா, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இன்று பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், டிவிஸ் லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்லா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்,ஜி.சி, கோல் இந்தியா, ஹிண்டால்கோ, ஐடிசி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐடிசி, டாடா ஸ்டீல், என்.டி.பி,சி, ஆக்ஸிஸ் வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் தொடங்கியிருந்தாலும், தற்போது 10.02 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 186.25 புள்ளிகள் அதிகரித்து, 57,779.74 புள்ளிகளாகவும், நிஃப்டி அதிகரித்து,17,280.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

opening bell: indices trade higher amid positive global cues, focus in SBI, Tata power

opening bell: indices trade higher amid positive global cues, focus in SBI, Tata power/ஆரம்பமே அசத்தல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய எஸ்பிஐ, டாடா பவர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.