புதுடெல்லி:
டெல்லி அருகே ரோகிணி செக்டார் 16 என்ற பகுதியில் நேற்று மாலை பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சாக்கடைக்குள் விழுந்து சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவிலும் மீட்புப் பணிகள் நடைபெற்றது. ஆனாலும், பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்புக்குழு அவர்களின் உடல்களை மீட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.