சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடபுதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமா மகேஸ்வரி நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வுகளின் முடிவுகளை விரைவாக வெளியிடும் வகையில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நீங்கலாக, இதர அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும்போதே, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். இதுகுறித்த தகவல்தேர்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்படும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை ஒருமுறை பதிவின் (ஒடிஎம்) மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு சான்றிதழ்தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது விடுபட்டிருந்தாலோ, ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நாளுக்கு 2 தினங்களுக்கு முன்புவரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும், மறுபதிவேற்றம் செய்யவும் அனுமதிக்கப்படும்.
உரிய முறையில் பதிவேற்றம்செய்யாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் சான்றிதழ்சரிபார்ப்பு பணி, பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையிலேயே அமை யும்.
எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம்செய்வதில் அதிக அக்கறையுட னும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் அல்லது 1800-419-0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.