விவசாயிகளின் நகைக்கடன் வட்டியினை தள்ளுபடி செய்திட வேண்டும்.. சரத்குமார் வேண்டுகோள்.!!

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற தகுதிவாய்ந்த விவசாயிகளின் நகைக்கடன் வட்டியினை தள்ளுபடி செய்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள்ளாக அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட நகைக்கடன்கள், 6 ஆயிரம் கோடி அளவில் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்து, தங்களது தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கத்து.

2021 மார்ச் 31 வரை நகைகளை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பொருந்தும் எனவும், தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு தெரிவித்து, ஒட்டுமொத்தமாக பெறப்பட்ட சுமார் 48 லட்சம் நகைக்கடன்களில் சுமார் 14.60 லட்சம் நகைக்கடன்களே தள்ளுபடி செய்வதற்கு தகுதி வாய்ந்தவை என அறிவித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அறிகிறேன். 

கூட்டுறவு சங்கங்களில், 5 சவரன் அதாவது 40 கிராம் வரை பெறப்பட்ட நகைக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என விதிமுறை நிர்ணயிக்கதால். சற்று கூடுதலாக 41 கிராமோ, 42 கிராமோ வைத்து நகைக்கடன் பெற்றவர்கள், தகுதி வாய்ந்த பயனாளர்களாக இருந்தும் பலனை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா சமயத்தில் முக்கிய தேவைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக கடன் பெற்ற அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

எனவே, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு மேல் நகைக்கடன் பெற தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு, ஏழைகளுக்கு குறைந்தபட்ச ஆறுதலாக நகைக்கடன் வட்டியினை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாமானிய மக்கள், விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பு என்பதை கருத்தில் கொண்டு வேண்டுகோளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.