புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் 1,270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றைய பாதிப்பு மேலும் சற்று குறைந்தது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1,259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரத்து 982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 35 புதிய உயிரிழப்புக்கள் பதிவானதால், கொரோனா மரண எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 70 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,378 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் 183.53 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.