இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது இன்னும் ஏற்றம் காணுமா? இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் என்ன?
பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
இதற்கிடையில் இன்று கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?சந்தைக்கு சாதகமான காரணிகள் என்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் விலை 80 பைசா உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன காரணம் இதுதான்..!
சர்வதேச சந்தைகள்
ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியே இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.
அன்னிய முதலீடுகள்
கடந்த மார்ச் 29 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கல் 35.47கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1713.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ப்ரீ ஓபனிங்கிலேயே குழப்பம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 284.61 புள்ளிகள் அதிகரித்து 58,228.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 67.30 புள்ளிகள் அதிகரித்து , 17,392.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்ட சந்தையானது, தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது.
தொடக்கம் எப்படி?
தொடக்கத்தில் சென்செக்ஸ் 343.12 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து, 58,286.77 புள்ளிகளாகவும், நிஃப்டி 90 புள்ளிகள் அல்லது .52% அதிகரித்து, 17,415.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1593 பங்குகள் ஏற்றத்திலும், 417 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
கவனிக்க வேண்டிய பங்குகள்
இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் ஓ.என்.ஜி.சி, ஹீரோ மோட்டோ கார்ப், ரயில் விகாஸ் நிகாம், ஐடிபிஐ வங்கி, எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸ், இண்டர்குளோப் ஏவியேஷன், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ், டாடா கன்சியூமர் ப்ராடக்ஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
இன்று பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்றவை 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா கன்சியூமர், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்,ஜி.சி, ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்செர்வ், மாருதி சுசுகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, சன் பார்மா, என்.டி.பி.சிஉள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
இப்படி பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில், தற்போது 9.42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 375.21 புள்ளிகள் அதிகரித்து, 58,318.86 புள்ளிகளாகவும், நிஃப்டி 100.95 புள்ளிகள் அதிகரித்து,17,426.25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
opening bell: indices trade higher amid positive global cues, focus in ONGC, hero moto, IDBI bank
opening bell: indices trade higher amid positive global cues, focus in ONGC, hero moto, IDBI bank/தொடர்ந்து ஏற்றம் காணும் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோ,ஐடிபிஐ வங்கி!