பாகிஸ்தான்
பிரதமர்
இம்ரான் கான்
தலைமையிலான தெஹரீக் இ இன்சாப் கூட்டணி அரசுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பறி போய் விட்டது. இம்ரான் கான் கூட்டணியில் இடம் பெற்றிருந்த முட்டாஹிதா குவாமி பாகிஸ்தான் இயக்கம் என்ற கட்சி, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கை கோர்த்து விட்டது.
இந்த கூட்டணி காரணமாக இம்ரான் கான் கட்சிக்கு பெரும்பான்மை பலம் பறி போய் விட்டது. இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முட்டாஹிதா கட்சியுடனான கூட்டணி குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்டுள்ள டிவீட்டில், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளும், முட்டாஹிதா கட்சியும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை இரு கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு விரைவில் அங்கீகரிக்கும். அதன் பின்னர் இந்த கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் நாங்கள் தெரிவிப்போம். பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
அப்ரமோவிச்சுக்கு விஷம் கொடுத்தார்களா?.. “அபத்தம்”.. ரஷ்யா நிராகரிப்பு
ஏற்கனவே பாகிஸ்தான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இப்போது அரசுக்கு பெரும்பான்மை பறி போயுள்ளது. இது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் எதிர்க்கட்சிகளிடம் இப்போது கூட்டாக 177 எம்.பிக்கள் உள்ளனர். அதேசமயம், இம்ரான் கான் தலைமையிலான ஆளும் கூட்டணிக்கு 164 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது.
இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் அதை விட கூடுதலான எம்.பிக்கள் அக்கூட்டணி வசம் தற்போது உள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் எண்ணி்கை 172 ஆகும். இம்ரான் கான் கூட்டணி 179 பேருடன் ஆட்சியமைத்தது. தற்போது அது சிறுபான்மை அரசாக மாறியுள்ளது.
சாலமன் தீவில் புகுகிறது சீனா.. உருவாகிறது கடற்படைத் தளம்.. பரபர தகவல்கள்!
ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவத்தையும் இம்ரான் கான் பகைத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அவரது அரசுக்கு பெரும்பான்மை பறி போயுள்ளது. அரசு கவிழும்அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை ராணுவம் ஏதாவது புரட்சியில் ஏற்பட்டால் பாகிஸ்தானில் மீண்டும் பெரும் குழப்ப நிலை உருவாகும். பாகிஸ்தானில் எது நடந்தாலும் அது இந்தியாவுக்கும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பைக் கொடுக்கும் என்பதால் தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 3ம் தேதி இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திமுடிவுக்கு வரும் உக்ரைன் போர் – ரஷ்யா சொன்ன குட் நியூஸ்!