சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன், தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அந்தப்பகுதியில் உள்ள மைதானத்துக்கு விளையாட செல்வது வழக்கம். அப்போது தடகள பயிற்சி அளிப்பதாகக் கூறி மணப்பாக்கத்தைச் சேர்ந்த கோபிகண்ணன் (32) என்பவர் சிறுவனிடமும் அவனின் நண்பர்களிடமும் அறிமுகமாகியுள்ளார். அதன்பிறகு கோபி கண்ணன், பயிற்சி என்ற பெயரில் சிறுவன், அவனுடைய நண்பர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், தன்னுடைய தந்தையிடம் விவரத்தைக் கூறினார்.
இதையடுத்து கோபிகண்ணன் மீது எம்.ஜி.ஆர்நகர் காவல் நிலையத்தில் சிறுவன் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கோபிகண்ணனிடம் விசாரணை நடத்தினர். சிறுவன் அளித்த தகவலின்படி கோபிகண்ணன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளிl வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான கோபிகண்ணனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரமாகும். இவர் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.