ஆர்ஆர்ஆர் படத்தில் அலியா பட் வரும் காட்சிகள் மிகக் குறைவாக இருந்ததால் அதிருப்தியான அவர், இயக்குநர் ராஜமெளலியை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் கதியாவாடி படத்தில் மும்பை கேங்ஸ்டர் கங்குபாயாக நடித்து அசத்தியிருந்தார் அலியா பட்.
படமும் நல்ல வசூலை குவித்தது. அடுத்த அவர் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஆர்ஆர்ஆர் படத்தில் கதாநாயகர்களுக்கு கொடுத்த அளவுக்கு அலியா பட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த அலியா பட், இயக்குநர் ராஜமெளலியை அன்ஃபாலோ செய்துவிட்டதாகத் தெரிகிறது.
புதிய சாதனை படைத்த கேஜிஎஃப் டிரைலர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் கேஜிஎஃப் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர், வெளியான 24 மணி நேரத்தில் இதுவரை வெளியான இந்திய படங்களிலேயே அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.
ஸ்கை டைவிங் செய்த நடிகை
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக நடித்துவரும் ஈஷா ரெப்பாவுக்கு தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது.
அவர் தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அச்சமின்றி மகிழ்ச்சியுடன் குதித்து வெற்றிகரமாக தரையிறங்கும் வீடியோ சிலிர்ப்பை தருகிறது.
I DID THAT!!! pic.twitter.com/mJ2Jc5tcjN
— Eesha Rebba (@YoursEesha) March 28, 2022
விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்ட லிகர் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.
தாத்தா நீங்க வேற லெவல்… ஆனா உங்க முயற்சி கைகூடுமா?
இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்தக் கூட்டணி அடுத்த படத்திலும் மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை பூரி ஜெகன்நாத் சமீபத்தில் வெளியிட்டார்.
புதிய பட போஸ்டரையும் அவர் யூ-டியூப் தளத்தில் அப்லோடு செய்தார். அந்தப் படத்துக்கு ஜன கண மன என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வானில் இருந்து ராணுவ வீரர்கள் போர்க் களத்தில் குதிப்பது போன்று மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதியையும் படக் குழு அறிவித்துள்ளது. படம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 ஆம் சேசி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராணுவ அதிகாரியாக விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மிடுக்கான தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil