டெல்லி: ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த், ஒன்றிய அரசிடம் இருந்து 38 இனங்களில் நிதி வர வேண்டி உள்ளதாக பேசியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி வகையில் ரூ.9,842 கோடியும், அரசி மானிய வகையில் ரூ.2,032 கோடியும் ஒன்றிய அரசு தர வேண்டியுள்ளது.