திண்டுக்கல்: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா திண்டுக்கல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் கஞ்சா கடத்திய அருண்குமார், கிருஷ்ணனை திண்டுக்கல் போதை தடுப்பு போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.