பொதுவாக இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது.
கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்கிறார்கள்.
உண்மையில் எடையைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உணவின் வழியாக எடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.
குறிப்பாக, நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் கொண்ட சில உணவுகளைத் தனியாக எடுத்துக் கொள்வதை விட சேர்த்து எடுத்துக் கொள்வதினால் உடலில் கெட்ட கொழுப்புகள் கரைக்கப்படுவதோடு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் தேங்கும் தேவையற்ற சதையைக் குறைக்க முடியும்.
அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
- ஓட்ஸ் வால்நட் இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சமன் செய்யப்படுவதோடு கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- வாழைப்பழத்தை பீநட் பட்டருடன் சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்வதோடு, உடலுக்குத் தேவையான புரதச் சத்தையும் அது கொடுக்கிறது. நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.
- முட்டையுடன் முட்டைகோஸை சேர்த்து சாப்பிடும்போது, அது இயல்பாகவே பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
- இலை வடிவ காய்கறிகளுடன் அவகேடோவும் சேர்த்து தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் அது உடலில் நல்ல கொழுப்பு அமிலங்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். நல்ல கொழுப்பு அமிலங்கள் உடலில் சேரும்போது, அது அதிகப்படியாக பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவி செய்கிறது.
- டார்க் சாக்லெட்டுடன் பாதாம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடையைக் குறைக்கலாம். இவை மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் தேவையற்ற அதிக கலோரிகளைக் குறைக்க உதவி செய்கிறது.