இந்த ஆண்டு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று
விஜய்
நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட்.
பீஸ்ட்
படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
வரும் ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் படம் வெளியாகிறது. விஜய் படம் என்றாலே ஆடியோ லாஞ்ச் விழாக்கள் களைக்கட்டும். ஆனால் இம்முறை ஆடியோ லாஞ்ச் நடத்தப்படவில்லை. பீஸ்ட் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும் அவற்றின் சிங்கிள் ட்ராக்கும் வெளியாகி விட்டதால் தனியாக ஆடியோ லாஞ்ச் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
அரசனை நம்பி புருஷனை விட்டுட்டேனே… ‘புள்ளியால்’ கதறும் மாஜி மனைவி!
இதனால் டீஸர், ட்ரெயிலர் கேட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என்றும் பீஸ்ட் படத்தின் டீஸர் எப்ரல் 1ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பீஸ்ட் பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட
விஜய் ரசிகர்கள்
முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணிக்கு பீஸ்ட் பைக் ரேலி செல்ல
பெங்களூரு தமிழ் பசங்க
முடிவு செய்துள்ளனர். இந்த பேரணி பெங்களூருங பிரகாஷ் நகரில் தொடங்கும் என்றும் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாட்களில் படம் செய்த வசூலும், ரசிகர்களின் செயலும் – RRR படத்தின் சாதனை!
அடுத்த செய்திBeast: சவுதி அரேபியாவில் ஆரம்பமான பீஸ்ட் கொண்டாட்டம்… என்ன மேட்டருன்னு பாருங்க!