புதுடில்லி: நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, பார்லிமென்ட் கூட்டத்திற்கு ஹைட்ரஜன் காரில் வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக தண்ணீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜன் காரை அறிமுகம் செய்துள்ளோம். மாதிரி திட்டத்தில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் போது, இறக்குமதி குறைவதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்காக அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில், ஏற்றுமதி துவங்கும். நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார்.மத்திய சாலை போக்குவரத்து மற்றும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.