திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி, கணவர் கருணாநிதி வீடு கட்டுபவர்களிடம் கட்ட பஞ்சாயத்து பேசும் காணொளி குறித்து, அறப்போர் இயக்கம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “பெண்களுக்கு சம உரிமை என சொல்லி உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடம் கொடுத்துவிட்டு வார்ட் 34 திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி கணவர் கருணாநிதி வீடு கட்டுபவர்களிடம் கட்ட பஞ்சாயத்து. இந்த கட்ட பஞ்சாயத்துகளையும், கவுன்சிலர்கள் புருஷன்களையும் ஒழிப்பது எப்போது?
திமுக கவுன்சிலர் ஷர்மிளா காந்தி கணவர் கருணாநிதி வீடு கட்டுபவர்களிடம் கட்ட பஞ்சாயத்து. இந்த கட்ட பஞ்சாயத்துகளையும், கவுன்சிலர்கள் புருஷன்களையும் ஒழிப்பது எப்போது? – அறப்போர் இயக்கம் #DMK #MKStalin #TNGovt #TamilNews #Chennai #TamilNadu pic.twitter.com/QJz2OvNuVj
— Seithi Punal (@seithipunal) March 30, 2022
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று முழங்கிய முதல்வர் முக ஸ்டாலின் கட்ட பஞ்சாயத்து செய்த கவுன்சிலர் புருஷன் கருணாநிதி மீதும், தன்னுடைய பதவியை புருஷனுக்கு கொடுத்த வார்டு 34 திமுக கவுன்சிலர் ஷர்மிளா மீதும் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்?
வீடு கட்டுபவர்கள் விதி மீறல் செய்தால் அதற்கு உரிய நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்க பல அதிகாரிகள் கொண்ட துறை இருக்கும் போது அதில் கவுன்சிலர்கள் தலையிட்டு கட்ட பஞ்சாயத்து செய்வது எப்பொழுது தடுக்கப்படும்?” என்று அந்த பதிவில் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.