boAt இந்திய சந்தையில் குறைந்த விலையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இப்போது நிறுவனம் அதன் மலிவான
ஸ்மார்ட்வாட்ச்
Boat Wave Lite-ஐ இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
போட்
நிறுவனம் கடந்த வாரம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்வாட்சை குறித்து டீஸ் செய்திருந்தது.
இப்போது, Amazon India தளத்தில் போட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட்வாட்சின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. boAt இன் புதிய ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,000க்கும் குறைவாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் அசல் விலை ரூ.6,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா ஷாப்பிங் தளத்தில் இருந்து இந்த ஸ்மார்ட்வாட்சை மார்ச் 31 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் டீப் ப்ளூ, ஸ்கார்லெட் ரெட், ஆக்டிவ் ப்ளாக் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.
உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் நடந்த உண்மை சம்பவம்!
போட் வேவ் லைட் சிறப்பம்சங்கள்
போட் வேவ் லைட் 1.69″ இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 550nits வரை பிரைட்னஸை ஆதரிக்கிறது. ஸ்மார்வாட்ச் 160 டிகிரி கோண பார்வைத் தெளிவையும், 70% RGB நிறத்தையும் வழங்குகிறது. கையில் கட்டும் போது மிகவும் இலகுவாக இருக்கும்படி இந்த ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பயனாக வாட்சின் மொத்த எடை வெறு, 44.8 கிராம் தான் உள்ளது.
மெனுவை அணுகுவதற்கும், வாட்சின் பயன்பாடுகளை கையாளவும் பக்கவாட்டில் வட்ட வடிவிலான கிரவுண் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண கைகடிகார லுக்கை தரும் இந்த ஸ்மார்ட்வாட்ச், பல ஸ்மார்ட் வேலைகளை செய்ய உதவுகிறது. போட் வேவ் லைட் 100க்கும் மேற்பட்ட வாட்ச் முகப்பு ஆதரவுடன் வருகிறது.
இந்த வாட்ச் முகப்பை boAt ஸ்மார்ட்வாட்சுக்கான செயலி மூலம் பதிவிறக்கம் செய்து மாற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்சில் இன்னும் பல உடலியல் கண்காணிப்பு அம்சங்கள் உள்ளன. இது நம்மை எப்பொழுதும் ஆக்டிவாக, நலமுடன் இருக்க உதவுகிறது.
வாட்ச் வேவ் லைட் பாதுகாப்பு அம்சங்கள்
இது 24/7 இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உடற்தகுதியை மேம்படுத்த பத்து விளையாட்டு முறைகளை இந்த வாட்ச் ஆதரிக்கிறது. ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா, கால்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, ஸ்கிப்பிங், மலையேற்றம், நீச்சல் ஆகிய விளையாட்டுகள் இதில் அடங்கும்.
Google Fit
மற்றும்
Apple Health
ஆகிய செயலிகளுடன் ஒருங்கிணைந்து இந்த ஸ்மார்ட்வாட்ச் செயல்படும். எனவே, எந்த ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் கவலைப்பட வேண்டாம். மேலும், இதயத் துடிப்பை கணிக்கும் சென்சார், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறியும் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
Jio அதிரடி – முதல் முறையாக சூப்பர் திட்டம் அறிமுகம்!
போட் வேவ் லைட் ஸ்மார்ட்வாட்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள்கள் வரை தாங்கும் சக்திவாய்ந்த பேட்டரி ஆயுளைப் பெறுகிறது. இது அழைப்புகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் Notification-ஐ வழங்குகிறது. மேலும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆகியவற்றிற்கான IP67 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. குறைந்த விலையில் சிறந்த பலன்களை கொண்டு விற்பனைக்கு வருகிறது
boAt Wave Lite
ஸ்மார்ட்வாட்ச்.
மேலதிக செய்திகள்:
Smart Watch-ஆல வந்த வினை – நபரை தூக்கிய இண்டர்நேஷனல் போலீஸ்!ஏப்ரல் 1 முதல் புதிய சுங்க விதிகள் – விலை குறையும் ஸ்மார்ட்போன்கள்!இந்த போன்களில் இனி WhatsApp இயங்காது!
அடுத்த செய்திஏப்ரல் 1 முதல் புதிய சுங்க விதிகள் – விலை குறையும் ஸ்மார்ட்போன்கள்!