திருச்சி திருவெறும்பூரை அடுத்த வாழவந்தான் கோட்டையில் அக்கா மற்றும் அவரது ஒரு வயது மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய விட்டு தப்பி ஓடிய தம்பியை துவாக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் டைசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனலெட்சுமி தாய் வீட்டில் கீழ்பகுயில் தனது 1 வயது மகன் சாய் தேவ்வோடு வசித்து வருகிறார். அவரது தம்பி தனகோடி (22) என்பவர் மாடியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப சண்டையின் காரணமாக தனக்கோடி தன்னுடைய அக்கா தனலெட்சுமி மற்றும் அவரது ஒரு வயது மகன் சாய்தேவ் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் உயிருக்கு போராடிய தனலட்சுமி மற்றும் சாய்தேவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி துவாக்குடி அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளித்தை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபட்டனர். தனலட்சுமியும், சாய் தேவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனக்கோடியை தேடி வருகின்றனர். தனக்கோடி கைது செய்த பிறகுதான் எதற்காக தனலெட்சுமியை வெட்டினார் என்பது தெரியவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM