தமிழக பாஜக நிர்வாகிகள் விரைவில் மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக மையக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யார் யாருக்கு என்ன பொறுப்புகள் வழங்குவது என்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, வானதி ஸ்ரீநிவாசன், பொன். ராதா கிருஷ்ணன், சி.பி.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
30 சதவீத மாற்றத்துடன் பாஜக நிர்வாகிகள் தயார் செய்யப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றமானது மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி – பிரிவு ஆகிய மட்டங்களில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஓரிரு தினங்களில் புதிய நிர்வாகிகளை பாஜக மாநிலத் தலைமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM