போதை பொருள் கடத்தல் வழக்கு சிங்கப்பூரில் முதியவருக்கு துாக்கு| Dinamalar

சிங்கப்பூர்:போதை பொருள் கடத்தல் வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட, சிங்கப்பூரை சேர்ந்த 68 வயது முதியவருக்கு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், போதை பொருள் தடுப்பு சட்டம் மிக கடுமையானது. போதை பொருள் பயன்படுத்துவோர் மற்றும் கடத்துவோருக்கு, அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.இதன்படி, போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான சிங்கப்பூரை சேர்ந்த அப்துல் கஹர் என்பவருக்கு, நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, மரண தண்டனைக்கு எதிரான சமூக ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான் கூறியதாவது:இளம் வயதில் போதை பழக்கத்திற்கு அடிமையான அப்துல் கஹர், வெளியில் சுதந்திரமாக இருந்த நாட்களை விட, அதிக காலத்தை சிறையில் கழித்தவர்.போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த அவர், 2005ல் வெளியே வந்தார்.

இந்த வழக்கில், 2013ல் அவர் குற்றவாளி என முடிவான பின், துாக்கு தண்டனை விதிக்கப் பட்டது. இதை ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி, ஐ.நா., மனித உரிமை அமைப்பு உட்பட, பல்வேறு தரப்பிலும் சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, சிங்கப்பூரில் துாக்கு தண்டனை நிறைவேற்றும் நடைமுறை, 2019ல் நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், முதல் நபராக அப்துல் கஹர் துாக்கிலிடப்பட்டு உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.