புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வடசேரிபட்டியில் அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் தங்களது கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுமென எனக்கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சுற்றுவட்டார கிராம மக்கள், இன்று புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.