கலைகளின் புரவலராக அறியப்பட்ட திப்பு சுல்தான் பல குறிப்பிடத்தக்க ஓவியங்களை உருவாக்கினார். அவற்றில் பல சமீபத்திய ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏலத்தில் மிகப் பெரிய தொகையைப் பெற்றன. அவரது கருவூலத்தில் இருந்து மற்றொரு படைப்பு புதன்கிழமை (மார்ச் 30) சோதேபியின் “இஸ்லாமிய உலக கலைகள் & இந்தியா” ஏலத்தில் ஏலம் விடப்படுகிறது. ‘பொல்லிலூர் போர்’ என்ற தலைப்பில், வரலாற்றாசிரியர் வில்லியம் டால்ரிம்பிள் “அந்த காலத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று” என்று வர்ணித்த இந்த படைப்புக்கு 5,00,000 யூரோக்கள் முதல் 8,00,000 யூரோக்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஓவியம் என்ன சித்தரிக்கிறது?
கிட்டத்தட்ட 32 அடி நீளமுள்ள இந்த நினைவுச்சின்ன ஓவியம், செப்டம்பர், 18970-ல் நடந்த பொல்லிலூர் போரில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக மைசூர் ஆட்சியாளரான ஹைதர் அலி மற்றும் அவருடைய மகன் திப்பு தலைமையிலான மைசூர் ராணுவத்தின் வெற்றியைக் குறிக்கிறது. மைசூர் ராணுவத்திற்கு எதிராக பிரிட்டிஷ் வீரர்கள் போராடுவதைக் கறுப்பு விதிகள் கொண்ட காகிதத்தில் கவ்வாக் காட்டுகிறது. இந்த ஓவியம் மைசூர் ராணுவத்திற்கு எதிராக பிரிட்டிஷ் வீரர்கள் போராடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது.
சோதேபி இணையதளத்தில் இந்த படைப்பு பற்றிய குறிப்பில், டேரிம்பிள் குறிப்பிடுகையில், “இந்த ஓவியம் பத்து பெரிய தாள்களுக்கு மேல் நீண்டு, கிட்டத்தட்ட 32 அடி (978.5 செ.மீ.) நீளம் கொண்டது. மேலும் கம்பெனியின் பீரங்கிகள் வெடித்து உடைந்த தருணத்தை சித்தரிக்கிறது. சமகால முகலாய வரலாற்றாசிரியர் குலாம் ஹுசைன் கான் கருத்துப்படி, பிரிட்டிஷ் சதுக்கத்தில், திப்புவின் குதிரைப்படை ஆக்ரோஷமான கடல் அலைகள் போல, இடது மற்றும் வலதுபுறத்தில் இருந்து முன்னேறுகிறது. இளஞ்சிவப்பு நிற கன்னமும், மாறாக பெண்மையும் கொண்ட கம்பெனி துருப்புக்கள் மைசூர் தீவிரமான தாக்குதலுக்காக அச்சத்துடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில், மைசூர் படைகள் கொல்வதற்காக நெருங்கி வருகிறார்கள்.
இந்த ஓவியத்தின் முக்கியத்துவம் என்ன?
மைசூரின் கடைசி ஆட்சியாளரான திப்பு சுல்தானால், 1784-ம் ஆண்டில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட டாரியா தௌலத் பாக் ஒரு பெரிய சுவரோவியத்தின் ஒரு பகுதியாக இந்த படைப்பு உருவாக்கப்பட்டது.
அப்படி மூன்று ஓவியங்கள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றில் ஒன்று, 2010-ல் ஒரு சேதேபி ஏலத்தில் 7,69,250 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ஏலத்தில் உள்ள ஓவியம் போலல்லாமல், பெரிதும் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இப்போது ஏலத்திற்கு வரவிருக்கும் படைப்பு இங்கிலாந்தில் உள்ள தனியார் சேகரிப்பின் ஒரு பகுதியாகும். மேலும், இந்த படைப்பு பல கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் லண்டனில் 1990 கண்காட்சி மற்றும் 1999 எடின்பரோவில் நடந்த கண்காட்சி ஆகியவை அடங்கும்.
சமீபத்திய ஆண்டுகளில் திப்பு சுல்தானின் வேறு என்ன நினைவுச் சின்னங்கள் ஏலம் விடப்பட்டன?
திப்பு சுல்தானின் அரியணையை அலங்கரித்த எட்டு புலித் தலைகளில் ஒன்று 1.5 மில்லியன் யூரோ விலையில் நவம்பர் 2021-ல் ஏலத்திற்கு வந்தது. இங்கிலாந்தின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை (DCMS) அதன் ஏற்றுமதியை தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த சிம்மாசனம் பிரிட்டிஷ் வரலாற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது என்று முடிவானது. அதனால், இங்கிலாந்தில் இருந்து ஒருவர் வாங்கலாம் என்று நம்புகிறது.
திப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் மார்ச் 2019-ல் சுமார் 1,07,000 யூரோக்களுக்கு ஏலம் போனது. அதில் வெள்ளியில் பொருத்தப்பட்ட 20-துளை ஃபிளிண்ட்லாக் துப்பாக்கி மற்றும் பயோனெட் ஆகியவை 60,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டன. அதே ஆண்டில், ஜூன் மாதத்தில், திப்பு சுல்தானின் மேஜிக் பாக்ஸை கிறிஸ்டி 4,95,000 டாலருக்கு விற்பனையானது.
2015-ம் ஆண்டில், திப்புவின் ஆயுதங்கள் மற்றும் கவசங்களின் தொகுப்பு போன்ஹாம்ஸ் இஸ்லாமிய மற்றும் இந்திய கலை விற்பனையில் மொத்தம் 6 மில்லியன் யூரோக்களுக்கு மேல் விற்கப்பட்டது. ஏலத்தில் உள்ள 30 பொருட்கள் ஒருவரின் சேகரிப்பில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“