டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை இன்று பிற்பகல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்க உள்ளார். தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றார்.இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அறையில் நடைபெறுகிறது. அப்போது தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியை வழங்க வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை முழுமையாக தரவேண்டும், மேகதாது அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் பிரதமரிடம் வலியுறுத்த இருக்கிறார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த உள்ளார். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் நரேந்திரமோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் நடைபெறும் அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கும் அவர் அழைப்பு விடுக்கிறார். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி மோதிலால் நேரு ரோட்டில் உள்ள மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். நிதின் கட்காரி வீட்டில் அவரை சந்திக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அக்பர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சப்தர்ஜங்க் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கிறார். மாலை 4.30 மணிக்கு நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை உத்யோக் பவனில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்தில் சந்திக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரையும் சந்திக்கிறார். மேலும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்கள்.