குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகின்றார். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகிறார் சிம்பு.
இடையில் பல பிரச்சனைகளை சந்தித்து துவண்டுபோன சிம்புவுக்கு
மாநாடு
படம் கைகொடுத்து தூக்கிவிட்டது.அப்படத்தின் மாபெரும் வெற்றியினால் சிம்பு தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
வலிமை படத்தை பார்த்த முதல்வர்…வினோத்திடம் விசாரணை நடந்த முடிவு..!
ஒரே நேரத்தில்
வெந்து தணிந்தது காடு
, கொரோனா குமார்,
பத்து தல
ஆகிய படங்களில் பிஸியாக நடித்துவருகிறார் சிம்பு. மேலும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிவருகின்றார்.
சிலம்பரசன்
இந்நிலையில் பிரபல நடிகர் பிரித்விராஜ்
பப்லு
சிம்புவை பற்றி பேசியுள்ளார். சிம்புக்கு இடையில் உடல் எடை கூடி பலராலும் விமர்சிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு தன் உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக காட்சியளித்தார்.
சிலம்பரசன்
இதனை பப்லு பாராட்டியுள்ளார். சிம்பு உடல் எடையை குறைத்தது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அதை தொடர்ந்து பராமரிக்க கட்டுக்கோப்பாக இருக்கவேண்டியது அவசியம். சிம்பு குழந்தையாக இருக்கும்போது இருந்தே எனக்கு தெரியும். நான் எது சொன்னாலும் சிம்பு கண்டிப்பாக கேட்பார். ஆனால் அவருக்கு வாய் தான் கொஞ்சம் அதிகம் என கூறியுள்ளார் பப்லு என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!
அடுத்த செய்தி’வாடிவாசல்’ படத்துக்காக போட்டா போட்டி: குதுகலிக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்..!