சென்னை அருகே ராணுவ அதிகாரி என கூறி வாடகைக்கு வீடு கேட்பது போல் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிகரணையில் உள்ள வீடு ஒன்று வாடகைக்கு விடப்படுவதாக ஆன்லைனில் வெளியிடப்பட்ட விளம்பரத்தையடுத்து வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய கும்பல், போலி ஆதார்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை வீட்டின் உரிமையாளருக்கு அனுப்பி வைத்து இராணுவ அதிகாரி என நம்ப வைத்துள்ளனர்.
இதைதொடர்ந்து அட்வான்ஸ் தொகையினை மிலிட்டரி கணக்கில் இருந்து அனுப்பி வைப்பதாகவும், முன்னதாக 50 ஆயிரம் அனுப்பி வைத்தால் மிலிட்டரி கணக்கோடு லிங்க் ஆகும் எனவும், வீட்டின் அட்வான்ஸ் தொகையுடன் பணத்தையும் சேர்த்து அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளனர்.
இராணுவ அதிகாரி என நம்பி, இரு தவணையாக மொத்தம் 99 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பி வைத்ததாகவும், மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டதால் சந்தேகமடைந்த உரிமையாளார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக விசாரனை மேற்கொண்ட தாம்பரம் போலீசார், அந்த வங்கி கணக்கை முடக்கி மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.