தொலைந்த லக்கேஜ்களை கண்டுபிடிக்க இண்டிகோ இணையதளத்தை வாலிபர் ஒருவர் ‘ஹேக்’ செய்த நிலையில், தங்கள் இணையதளத்தை யாரும் ஹேக் செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது இண்டிகோ.
மார்ச் 27 அன்று, இண்டிகோ விமானத்தில் பாட்னாவிலிருந்து பெங்களூருக்கு குமார் என்ற இளைஞர் பயணித்தபோது. பெங்களூரூ விமான நிலையத்தில் தன் பையை எடுத்து வருவதற்கு பதிலாக சரியாக ஒரே மாதிரியாக இருந்ததால் தனது சக பயணியின் பையை எடுத்து வந்துவிட்டார். பை மாறி எடுத்து வந்ததை உணர்ந்த பிறகு, குமார் இண்டிகோ வாடிக்கையாளர் சேவையை அழைக்க முயன்றார். தானியங்கி தொலைபேசி அமைப்பு தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியிடம் பேசியுள்ளார்.
தனது பை மாறியது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்க, மைய அதிகாரி சக பயணியின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் சக பயணி அழைப்பை ஏற்கவே இல்லை. சக பயணியின் மொபைல் எண்ணை குமார் கேட்டபோது தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேற்கோள் காட்டி சக பயணியின் தொடர்பு விவரங்களை அவருக்கு வழங்க சேவை மைய அதிகாரி மறுத்து விட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைப்பதாக சேவை மைய அதிகாரி குமாருக்கு உறுதியளித்த நிலையில் அதன்பின் எந்த அழைப்பும் குமாருக்கு வரவில்லை.
அவர் பேக் டேக்கில் எழுதப்பட்ட சக பயணிகளின் PNR அல்லது பயணிகளின் பெயர் பதிவைப் பயன்படுத்தி இண்டிகோ விமானத்தின் இணையதளத்தை தோண்டத் தொடங்கினார். அனைத்து தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, கணினி விசைப்பலகையில் F12 பொத்தானை அழுத்தி, இண்டிகோ இணையதளத்தில் டெவலப்பர் கன்சோலைத் திறந்து, நெட்வொர்க் பதிவு பதிவுடன் முழு செக்இன் ஓட்டத்தையும் பார்த்துள்ளார். இறுதியாக தனது சக பயணியின் தொலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் ஐடியையும் கண்டுபிடித்தார் குமார்.
Soo I traveled from PAT – BLR from indigo 6E-185 yesterday. And my bag got exchanged with another passenger.
Honest mistake from both our end. As the bags exactly same with some minor differences. 2/n
— Nandan kumar (@_sirius93_) March 28, 2022
அதோடு நிற்காமல் இண்டிகோ விமானத்தை டேக் செய்து இண்டிகோ இணையதளத்தில் “பாதிப்பு” இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக கூறினார். அதன் மூலம் தனது பையை தவறாக மாற்றிய சக பயணியின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்க முடிந்தது எனக்கூறினார். இதை முற்றிலுமாக மறுத்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
“எந்தவொரு பயணியும் இணையதளத்தில் இருந்து PNR, கடைசி பெயர், தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி தங்கள் முன்பதிவு விவரங்களைப் பெறலாம். இது உலகளவில் அனைத்து விமான அமைப்புகளிலும் நடைமுறையில் உள்ள விதிமுறையாகும். பாதுகாப்பு விஷய்த்தில் இண்டிகோ ஒருபோதும் சமரச செய்யாது,” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM