டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை வழங்க வேண்டும், கர்நாடகம் காவிரியில் மேகதாது அணையை கட்ட நுமதிக்க கூடாது என்றும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.