தமிழகத்தில் சாதிய மோதல் சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.