செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தின் முகப்புச்சுவர் திடீரென சரிந்து விழுந்தது.
அப்போது அந்த இடத்தில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து வலுவற்று இருக்கும் கட்டிடங்களை சரிசெய்து தரவேண்டும் எனவும், இடிக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பள்ளியின் தலைமையாசிரியர், பேரூராட்சி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.