சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. மயில் சிலை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது; சிலையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் 4 மாதத்தில் புதிய சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.