மனிதர்களுக்கு இடையிலான ஆழமான நட்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு பெண்ணிற்கும் பறவைக்கும் உள்ள ஆழமான நட்பை அறிந்தால் வியப்பீர்கள். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு ஒரு பறவையை தன் கூந்தலில் கூடு கட்ட அனுமதித்த்துள்ள நிலையில், ஒரு அசாதாரண நட்பின் கதை இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.
ஒரு ட்விட்டர் பதிவில், Hannah Bourne-Taylor என்ற பெண், தன் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்ட ஒரு பறவைக்கு, 84 நாட்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறினார்.
லண்டனில் வசிக்கும் ஹன்னா, தனது புதிய வாழ்க்கையைத் தொடங்க கானாவுக்கு இடம்பெயர்ந்தார். 2018 இல் மழைக்காலத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு சிறிய பறவை அதன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தவித்தது . பலத்த காற்றினால் மாமரத்தில் இருந்து விழுந்த கூட்டில் அந்த சின்னஞ்சிறு பறவை இருப்பதை பார்த்தாள்.
மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னா பின்னமான முதலை..!!
அதன் கண்கள் இறுக மூடியிருந்தன, மழையில் அடுங்கிக் கொண்டிருந்தது. முதலில் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்த அவர் இரவு முழுவதும் விழித்திருந்து, அதனை பாதுகாப்பாக வைப்பது எப்படி என யோசித்தார்
ஹன்னாத் பின்னர் பறவையைப் பராமரிக்கத் தொடங்கினார். இது பாதுகாப்பாக உணர வேண்டும் என தன் கூந்தலை கூடு போல் வடிவமைத்து அதனை அதற்கு வைத்து பராமரித்தார்.
பின்னர் நன்றாக வலர்ந்து வலிமை பெற்றதும் பறந்து சென்றது. இன்றும், அந்த பறவையை பற்றிய நினைவு வரும் போது அழுகிறேன் என்று ஹன்னா குறிப்பிட்டார். ஹன்னா தனது புதிய புத்தகமான ‘Fledgling’ பற்றி எழுதியுள்ளார்.