பெங்களூரு-“விசாலமான சாலைகள் அமைக்க வேண்டுமானால், தனியார், அரசு ஒருங்கிணைப்பு அவசியம். அங்கு சுங்க வரி வசூலிப்பதும் அவசியம்,” என பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் தெரிவித்தார்.சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., – மஞ்சேகவுடா: வாகன உரிமையாளர்கள், புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது, ஆயுட்கால வரி செலுத்துகின்றனர்.அப்படியிருந்தும், சுங்க வரி வசூலிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?அமைச்சர் சி.சி.பாட்டீல்: அரசு தன் நிதியில், அமைக்க வேண்டிய சாலைகளை அமைக்கிறது. சாலைகளை அகலப்படுத்த, தனியார் ஒத்துழைப்பு அவசியம். இதற்காக வரி வசூலிக்கப்படுகிறது. அபிவிருத்திக்கு வரி கட்டாயம். மாநிலத்தில் மட்டுமின்றி, மொத்த உலகிலும் இது அமலில் உள்ளது.சுங்கச்சாவடி சுற்றுப்பகுதியின், 10 கி.மீ., எல்லையில் வசிக்கும் கிராமத்தினர், விவசாயம் சம்பந்தப்பட்ட வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு வரி விலக்கு உள்ளது. வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ம.ஜ.த., – மரிதிப்பேகவுடா: சுங்கச்சாவடிகளில், 10 நிமிடத்துக்கும் அதிகமாக, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அமைச்சர் சி.சி.பாட்டீல்: முக்கிய புள்ளிகள், போலீஸ், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு, தனிப்பாதை அமைப்பது பற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும். வாகன நெருக்கடி அதிகரிக்கிறது. தற்போது எம்.எல்.ஏ., க்களுக்கு, இலவச பாஸ்டடேக் தரப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement