தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
இருவரும் பிரிந்த பிறகு அவரவர் வழிகளில் பயணிக்க துவங்கியுள்ளனர். அவர்களின் பிரிவைப்பற்றி மற்றவர்கள் தான் பேசி வருகிறார்களே தவிர அவர்கள் எதுவும் நடக்காதது போல் இருந்து வருகின்றனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க பலர் இறக்கிய போதும் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துவருவதால் அவரும், ஐஸ்வர்யா ஆல்பம் பாடலை இயக்கிய பிறகு பாலிவுட் படத்தை இயக்கப்போவதால் அவரும் பிஸியாக இருக்கின்றனர்.
பீஸ்ட் தீம் மியூசிக் காப்பியா ? ஆதாரத்துடன் சிக்கிக்கொண்ட அனிருத்..!
பிள்ளைகளை கவனிக்கவில்லை என்ற பேச்சு ஆரம்பமானதும் இருவரும் தங்கள் மகன்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் பிள்ளைகள் மீது அக்கறையுடன் தான் இருக்கின்றோம் என்று ட்விட்டர் பதிவின் மூலம் உணர்த்தினர்.
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கின்றார். முன்பு போல் இல்லாத அளவிற்கு அவர் சோஷியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினம் ஒரு பதிவாவது போட்டு வரும் ஐஸ்வர்யா இன்று தான் உடற்பயிற்சி செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்ன நடந்தாலும் ஒர்க் அவுட் செய்வதை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்பது போல் பதிவை போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டினாலும் சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா தான் எந்த கவலையும் இல்லை என்பதை காட்டிக்கொள்ளவே இதுபோன்ற பதிவுகளை போட்டுவருகின்றார் என்று சிலர் கமன்ட் செய்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ஐஸ்வர்யா நடந்ததை மறந்து வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்வதற்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜயகாந்த்; போட்டோ பார்த்து குஷியான ரசிகர்கள்!
அடுத்த செய்தி’ஆர் ஆர் ஆர்’ இயக்குனருடன் என்னதான் பிரச்சனை: உண்மையை போட்டுடைத்த ஆலியா..!