இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகள்தான் ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது அடுக்கடுக்காக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த காலங்களைவிட, தற்போதுதான் ரஷ்யாவிடம் இருந்து அளவுக்கு அதிகமான வகையில் ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். குறிப்பாக கடந்த மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக 15 சதவிகிதம் வரை கச்சா எண்ணெய் இறக்குமதியை ஐரோப்பிய நாடுகள் அனுமதித்திருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அமெரிக்காவில் இருந்து, 7 புள்ளி 5 முதல் 8 சதவிகிதம் வரையும் இறக்குமதி செய்யப்படுவதாகவும், ஆனால் ரஷ்யாவில் இருந்து அதற்கும் குறைவான அளவிலேயே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM