போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் சஸ்பெண்டு! கைது செய்யப்படுவாரா?

சென்னை: போலீசாரை கேவலமாக திட்டி மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் கட்சியில் இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. இவர் எப்போது  கைது செய்யப்படுவார், காவல்துறை திமுகவினரை கைது செய்யாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்ஞனா, இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அநத வழியாக ரோந்து வந்த வண்ணாரப்பேட்டை காவலர்கள் மணிவண்ணன், தியாகராஜன் ஆகியோர்  அவர்களிடம் விசாரணை செய்ததுடன், கலைந்து போக சொலலி அறிவுறுத்தினர்.

இதனால் கோபமடைந்த ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளிகள், காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் வசை பாடியதுடன்,  நான்தான் கவுன்சிலர், என்னை கேட்க நீங்க யாரு என்று காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தது அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டினர். இதை காவல்துறையினர் வீடியோ எடுத்தனர். இதனால் மேலும் கடுப்பான ஜெகதீசன்,  காவல்துறையினரை பார்த்து.   வா அடி வா… வீடியோ எடுத்து என்னா பண்ணப்போற என்று மிரட்டினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து திமுக தலைமை கவுன்சிலர் நிரஞ்ஞனா கணவர் ஜெகதீசனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

காவலர்களை மிரட்டிய கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் மீது காவல்துறை வழக்கு பதியவில்லை என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களிலோ, பொதுஇடங்களிலோ எல்லைமீறும் காவல்துறையினரை விமர்சித்தாலே பாய்ந்து வந்து கைது செய்யும் காவல்துறையினர், திமுகவினர் மீது வழக்குகூட பதிவு செய்ய மறுப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

சமீபத்தில் மற்றொரு திமுக பெண் கவுன்சிலரின் கணவர் வீடு கட்டும் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் வைர லான நிலையில், தற்போது காவலர்களிடையே மிரட்டிய சம்பவமும் அரங்அகேறி உள்ளது.

பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கொடுப்பதாக திமுக தலைமைகூறிக்கொண்டு ஏராளமான பெண்களை வார்டு கவுன்சிலராக்கி உள்ள நிலையில், அவர்களுக்கு பதிலாக அவர்களின் கணவரோ, குடும்பத்தினரோதான் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அவர்களின் அடாவடிகளும் அதிகரித்து வருகின்றன. இது போன்ற செயல்கள் தமிழகத்தில்  நாளுக்கு நாள்  அதிகமாகி கொண்டே இருக்கிறது.

முன்னதாக, சிறு தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்று பதவியேற்பின்போதே கூறி முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது எச்சரிக்கை காற்றில் கரைந்துபோனதாகவே தெரிகிறது.  சிறு தவறு செய்தாலும் தண்டிப்பேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் அத்துமீறும் நிர்வாகிகள் மீது சாட்டையை சுழற்றுவாரா?

எதிர்க்கட்சிகளை அவசரம் அவசரமாக கைது செய்து, நீதிமன்றத்தில் தொடர்ந்து குட்டு வாங்கிக்கொண்டிருக்கும் காவல்துறையினர் திமுகவினர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தயங்குவதேன்?  எப்போது தூக்கத்தில் இருந்து விழிக்கப்போகிறது? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

புதுவீடு கட்டும் வீட்டு உரிமையாளரை மிரட்டும் திமுக கவுன்சிலர் – வைரல் வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.