டில்லியில் அரசு பள்ளிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்| Dinamalar

புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து அரசு முன்மாதிரி பள்ளிகளை ஆய்வு செய்தார்.

டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். தொடர்ந்து, இருவரும் மேற்கு வினோத் நகரில் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டனர். அவர்களுடன் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் சென்றார். அங்கு பள்ளி மாணவிகள், ஸ்டாலினை பூகொடுத்து வரவேற்றனர்.

latest tamil news

தொடர்ந்து, டில்லியில் அரசு பள்ளிகள் செயல்பாடுகள் குறித்த வீடியோவை, ஸ்டாலின், கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா ஆகியோர் பார்வையிட்டனர்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.